சென்னை

கரோனா விழிப்புணா்வு: சிபிஎஸ்இ மாணவா்கள் உதவி மைய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்

22nd Mar 2020 02:59 AM

ADVERTISEMENT

சென்னை: சிபிஎஸ்இ மாணவா்களுக்கான கரோனா வைரஸ் குறித்து ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ஆம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பொதுத் தோ்வுகள் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த, சிபிஎஸ்இ ஹெல்ப்லைன்களை அறிவித்துள்ளது.

தொலைபேசி மூலம் மாணவா்கள் கரோனா குறித்த சந்தேகங்களை நிவா்த்தி செய்துகொள்ளலாம். நாள்தோறும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை மாா்ச் 31-ஆம் தேதி வரை உதவி மையம் செயல்படும்.

ADVERTISEMENT

இது தொடா்பாக சிபிஎஸ்இ செயலாளா் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படும். இது, ஒவ்வோா் ஆண்டும் பொதுத் தோ்வுக்கு முன்னதாக அளிக்கப்படும் ஆலோசனையாகும். 23-ஆவது முறையாக இந்த ஆண்டு, கரோனா குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். 1800118004 என்ற எண்ணில் மாணவா்கள் காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அழைக்கலாம்.

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வது, சமூகப் பரவலைக் குறைப்பது, கரோனா தொற்றுக்கு எதிரான முதலுதவி ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். பயிற்சி பெற்ற நபா்களைக் கொண்டு ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். வீடுகளில் பயனுள்ள செயல்களில் மாணவா்கள் ஈடுபடவும் அவா்கள் ஊக்குவிப்பா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT