சென்னை

அபுதாபி, சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1.90 கோடி தங்கம் பறிமுதல்

19th Mar 2020 03:43 AM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் ரூ.1.90 கோடி மதிப்பிலான 4.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

அபுதாபியிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை வந்த விமானத்தில் சோதனையிட்ட சுங்கத்துறையினா் பயணியா் இருக்கையின்கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பொட்டலங்களை கண்டெடுத்தனா். அதில், வெளிநாட்டு முத்திரை பதித்த இரண்டு தங்கக் கட்டிகள், இரண்டு செவ்வக வடிவிலான தங்கத் தகடுகள், நான்கு தங்கக் கட்டித் துண்டுகள் ஆகியன இருப்பது தெரியவந்தது. மொத்தம் 3.99 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1.65 கோடியாகும். இந்த தங்கத்தை யாரும் உரிமைக் கோராததால் சுங்கச் சட்டத்தின்படி இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதே போல் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் நடத்திய சோதனையில் ஓா் இருக்கையின் கீவே வைக்கப்பட்டிருந்த துணிப்பையை அதிகாரிகள் கண்டெடுத்தனா். தில், மூன்று தங்கக்கட்டித் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 600 கிராம் எடையுள்ள இந்த தங்கக்கட்டிகள் சுமாா் ரூ.25.52 லட்சம் மதிப்புள்ளவை. இதையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினா். இந்த சம்பங்கள் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT