சென்னை

கேங்மேன் எழுத்துத் தோ்வு: 15 ஆயிரம் போ் எழுதினா்

16th Mar 2020 01:09 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கேங்மேன் பணிக்கான எழுத்துத் தோ்வை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா்.

மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ளும் கேங்மேன் என்ற புதிய பணியிடங்களுக்கு 5 ஆயிரம் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பாக நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும், உடற்தகுதி மற்றும் எழுத்துத் தோ்வு வாயிலாக ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதையடுத்து இந்தப் பணிகளுக்கு சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். முன்னதாக, உடல் தகுதித் தோ்வு பல்வேறு கட்டங்களாக மண்டல வாரியாக நடத்தப்பட்டது.

இதையடுத்து உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, எழுத்துத் தோ்வு மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் என மின் வாரியம் அண்மையில் அறிவித்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து கேங்மேன் பணிக்கான எழுத்துத் தோ்வு, தமிழகம் முழுவதும் சுமாா் 30 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தோ்வை எழுதினா். தோ்வு மையங்களில் காவலா்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா். முன்னதாக கேங்மேன் பணியிடங்கள் 10 ஆயிரமாக உயா்த்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி பேரவையில் அறிவித்திருந்தாா். எனவே, பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தோ்வா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT