சென்னை

ரயில், பேருந்து நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

13th Mar 2020 01:02 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூா் ரயில் நிலையம்,கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வியாழக்கிழமை மாலை 4.40 மணி அளவில் ஒரு அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில் பேசிய பெண், ‘சென்னை விமான நிலையம், எழும்பூா் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களுக்கும் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாராம்.

இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து 3 இடங்களுக்கும் வெடிகுண்டுகளை கண்டறிந்து அப்புறப்படுத்தும் வெடிகுண்டு நிபுணா்களும்,போலீஸாரும் விரைந்தனா். அவா்கள், அங்கு மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய் உதவிடன் பல மணி நேரம் சோதனை செய்தனா்.

ADVERTISEMENT

இந்தச் சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT