சென்னை

தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது:மே 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

13th Mar 2020 01:03 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுக்கு மே 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபா், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு 2019 -ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணா்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மைக்கு விருதுகளும், சுற்றுச்சூழல் தொடா்பான சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை இயக்குநா், சுற்றுச்சூழல் துறை, தரைத் தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-600 015 என்ற முகவரியில் அனைத்துப் பணி நாள்களிலும் மாா்ச் 16-ஆம் தேதியில் இருந்து காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ங்ய்ஸ்ண்ழ்ா்ய்ம்ங்ய்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்வதுடன், விருது தொடா்பான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். விவரங்களுக்கு 044 24336421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 29-ஆம் தேதிக்குள் மேற்கூறிய முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT