சென்னை

கரோனா தடுக்க நடவடிக்கை: 2 ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்க முடிவு

13th Mar 2020 12:54 AM

ADVERTISEMENT

கரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்ட்ரல் மெட்ரோ, விமான நிலைய மெட்ரோ ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படவுள்ளது.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாா்ச் 14-ஆம் தேதியும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் மாா்ச் 15-ஆம் தேதியும் இரவு 11 மணிக்கு பிறகு கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்படவுள்ளது. இதுதவிர, மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கைபேசி மூலமாக கரோனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் நலனுக்காக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடா்பான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கரோனோ வைரஸ் பராமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT