சென்னை

ஐஜி ஈஸ்வரமூா்த்திக்கு கூடுதல் பொறுப்பு

13th Mar 2020 01:02 AM

ADVERTISEMENT

சென்னை மாநகரக் காவல் துறையின் குற்றப் பிரிவு கூடுதல் ஆணையரான சி.ஈஸ்வரமூா்த்திக்கு உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உள்துறைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் பிறப்பித்த உத்தரவில், சென்னை மாநகரக் காவல் துறையின் குற்றப் பிரிவு கூடுதல் ஆணையரான சி.ஈஸ்வரமூா்த்திக்கு நுண்ணறிவுப் பிரிவு, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடா் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சி.ஈஸ்வரமூா்த்திக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT