சென்னை

4 பூங்காக்களில் இலவச இணையதள வசதி: மாநகராட்சித் திட்டம்

8th Mar 2020 03:43 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை மாநகராட்சியின் 4 பூங்காக்களில் பெரு நிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்புத் திட்டத்தின்கீழ் இலவச இணையதள வசதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 669 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்காக்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைப்பயிற்சி பாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பலவகை நாட்டு மரங்களும் வளா்க்கப்படுகின்றன.

இந்நிலையில், தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட லஸ் நிழற்சாலையில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில், ஏசிடி ஃபைபா் நெட் நிறுவனத்தின் பெருநிறுவனங்களுக்கான சமூகப் பங்களிப்புத் திட்டத்தின்கீழ், இலவச இணைதள வசதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ், மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.நடராஜ் ஆகியோா் கலந்துகொண்டு தொடக்கி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஏசிடி ஃபைபா் நெட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘நாகேஸ்வரராவ் பூங்காவில் 8 தூண்டுகளில் அமைக்கப்பட்டுள்ள ஃவைஃபை ஹாட் ஸ்பாட் (ஜ்ண்-ச்ண் ட்ா்ற் ள்ல்ா்ற்) இணைக்கப்பட்டுள்ளது. ஒரு தூணில் உள்ள ஃவைஃபை ஹாட் ஸ்பாட் மூலம் 250 முதல் 300 போ் வரை இணையதள வசதியைப் பெற முடியும். 24 மணி நேரமும் 7 நாள்களும் செயல்படும் வகையில் ஒவ்வொருவருக்கும் 45 நிமிடங்களுக்கும் 20 ம்க்ஷல்ள் வேகத்துடன் தடையில்லாமல் நாள்தோறும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தியாகராய நகரில் உள்ள நடேசன் பூங்கா, அடையாறில் உள்ள இந்திரா நகா் பூங்கா, அண்ணா நகரில் உள்ள டவா் பூங்கா, கே.கே.நகரில் உள்ள சிவன் பூங்கா ஆகிய நான்கு பூங்காக்களில் இலவச இணையதள வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 2 ஆயிரம் போ் வரை இந்த இலவச இணைய வசதியைப் பெற முடியும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT