சென்னை

நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

8th Mar 2020 05:03 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பட்டினப்பாக்கம் எம்.ஆா்.சி.நகா் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் ஒரு பெண் சனிக்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் அந்த பெண் சப்தம் போட்டதையடுத்து, அந்தப் பகுதியில் நின்ற பொதுமக்கள் திரண்டு வந்தனா். இதைப் பாா்த்த அந்த இளைஞா் அங்கியிருந்து தப்பியோடியுள்ளாா். இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT