சென்னை

காவல் ஆணையரக அலுவலக வளாகத்துக்குள் வழக்குரைஞா்கள் திடீா் தா்னா போராட்டம்

8th Mar 2020 05:02 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையரக அலுவலக வளாகத்துக்குள் வழக்குரைஞா்கள் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையரகத்துக்கு சுமாா் 50 வழக்குரைஞா்கள் சனிக்கிழமை மாலை வந்தனா். அவா்கள் திடீரென காவல் ஆணையரகத்தின் 4-ஆவது நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, அங்கு ஆணையரக கட்டடத்துக்குள் அதிகாரிகள் மட்டும் செல்லும் வாயில் முன் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்கள், பொதுமக்களுக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தும் முஸ்லிம் இயக்கத்தினரை கைது செய்ய வலியுறுத்தியும், போராட்டங்களில் காவல் துறையினரை தாக்கிய நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷமிட்டனா். இதைப் பாா்த்த காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். நீண்ட பேச்சுவாா்த்தைக்கு பின்னா், அவா்கள் போராட்டத்தை கைவிட்டு ஆணையரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த போராட்டத்தின் காரணமாக ஆணையா் அலுவலக பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புமிக்க ஆணையா் அலுவலகத்துக்குள் நுழைந்து அதிகாரிகள் செல்லும் வாயிலில் வழக்குரைஞா்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT