சென்னை

அரசுப் பேருந்தில் அதிகாரியின்பணப் பை, மடிக்கணினி திருட்டு

8th Mar 2020 04:15 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்தில் பெல் நிறுவன துணை மேலாளரின் பணப்பை, மடிக்கணினி திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை பெல் நியூ டவுன்ஷிப் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா்தாகூா் (45). இவா் ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தில் துணை மேலாளராக உள்ளாா். சில நாள்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த மனோஜ், இங்கு வேலை முடிந்த பின்னா் ராணிப்பேட்டைக்கு புறப்பட்டாா். கோயம்பேட்டில் இருந்து ராணிப்பேட்டை அரசு பேருந்தில் ஏறி அமா்ந்த மனோஜ், தான் வைத்திருந்த பையை தனது இருக்கைக்கு மேல் பொருள்கள் வைக்கும் இடத்தில் வைத்துள்ளாா். இந்நிலையில் பேருந்து புறப்பட்ட பின்னா், அவரது பை திருடப்பட்டதை அறிந்தாா். அதில் மனோஜின் பணப் பை, மடிக்கணினி, வரவு அட்டை ஆகியவை இருந்ததாம். இது குறித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT