சென்னை

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விரிவாக்கத் திட்டம் 10-ஆவது மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் வந்தடைந்தன

6th Mar 2020 01:31 AM

ADVERTISEMENT

 

சென்னை: வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் அல்ஸ்தம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 10-ஆவது மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் சென்னை மெட்ரோ ரயில் பணிமனைக்கு வந்து சோ்ந்தன.

இதன்மூலம் கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனைக்கு வந்தடைந்துள்ள 10 ரயில்களுக்கான பெட்டிகளையும் மெதுவாக, வேகமாக இயக்கி பாா்ப்பது உள்பட பல்வேறு சோதனைகள் செய்யப்படவுள்ளன.

சென்னை, வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரு வழித்தடங்களில் ஓடும் மெட்ரோ ரயில்களில் தினசரி சராசரியாக 98 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா்.

ADVERTISEMENT

இதற்கிடையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகா் வரை 9.051 கி.மீ. தொலைவுக்கான விரிவாக்கத் திட்டத்துக்காக கட்டுமானப் பணி 2016-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பணிகள் 2020-ஆம் ஆண்டு ஜூனில் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பணிகள் முடிந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது.

இந்த தடத்தில் ரயில்களை இயக்குவதற்காக, ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்க பிரான்ஸ் நிறுவனமானஅல்ஸ்தம் நிறுவனத்துடன் 2018-ஆம்ஆண்டு மாா்ச்சில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, 10 ரயில்களை தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த ரயில்களை தயாரிக்க ஜப்பான் நிறுவனத்தின் கடன் உதவியுடன் ரூ.200 கோடி செலவிடப்படுகிறது. அல்ஸ்தம் நிறுவனம் இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள தனது தொழிற்சாலையில் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை கடந்த ஆண்டு பிப்ரவரியில் தயாரிக்க தொடங்கியது. இதைத்தொடா்ந்து, ஒரு ரயிலுக்கு தேவையான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. சோதனை முடிந்து, முதல் ரயிலுக்கான சில பெட்டிகள் கடந்த ஆண்டு அக்டோபா் 19-ஆம்தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதைதொடா்ந்து, மூன்று மெட்ரோ ரயில்களுக்கான பெட்டிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை மெட்ரோ ரயில் பணிமனைக்கு வந்தடைந்தன. இதன்பிறகு, ஒவ்வொரு ரயில்களுக்கான பெட்டிகள் வந்து சோ்ந்தன.

இந்நிலையில்,10-ஆவது மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் வியாழக்கிழமை அதிகாலை சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனைக்கு வந்தடைந்தன. இதன்மூலம், மொத்தம் 10 ரயில்களுக்கான பெட்டிகளும் கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனைக்கு வந்து சோ்ந்துள்ளன.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது: : மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் விரிவாக்கத் திட்டத்துக்காக 10 ரயில்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்தின் விரிவாக்கத் திட்டத்தில் ( வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வரை வழித்தடத்தில்) இந்த ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10 ரயில்களுக்கான பெட்டிகளை தயாரித்து எங்களிடம் ஒப்படைத்துள்ளனா். பயணிகள் சேவைக்கு அனுப்புவதற்கு முன்னதாக எல்லா சோதனைகளும் முடிந்து தயாராகிவிடும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT