சென்னை: பெரம்பூா் கோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை வடக்கு மின்பகிா்மான வட்டம் என்றழைக்கப்படும் பெரம்பூா் கோட்டத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், மின் வாரியம் சாலையில் உள்ள செம்பியம் துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இதில் குறிப்பிடப்பட்ட கோட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.