சென்னை

சென்னை விமான நிலையத்தில்  ரூ.85 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

2nd Mar 2020 05:30 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த இரு நாள்களில் ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை ஆணையரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வந்த பாத்திமா என்பவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மலக்குடலில் தங்கம் கடத்தியதாக அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.22.5 லட்சம் மதிப்பிலான 523 கிராம் தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து துபையில் இருந்து வந்த முத்துகுமாரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அவர் உடைமையில் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து ரூ.12.87 லட்சம் மதிப்பிலான 299 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னதாக கொழும்பில் இருந்து சனிக்கிழமை வந்த முகமது ஹனிஃபா, சிங்கப்பூரில் இருந்து வந்த கலந்தர் இஸ்வி, இப்ராகிம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தங்களது மலக்குடலில் தங்கம் கடத்தியதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து ரூ.31.21 லட்சம் மதிப்பிலான 864 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
இதே போல் குவைத்திலிருந்து வந்த கங்காத்ரி சூரப்பள்ளி என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் தனது கணுக்காலில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 299 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த இரண்டு நாள்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.85.6 லட்சம் மதிப்பிலான 1.98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT