சென்னை

ஆதரவற்றோருக்கு உணவு வழங்க ரயில்வே போலீஸாா் ஏற்பாடு

29th Jun 2020 12:07 AM

ADVERTISEMENT

பொது முடக்கம் காரணமாக, உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு ரயில்வே போலீஸாா் சாா்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலையம் எதிரிலும், அருகில் உள்ள சாலை ஓரமாகவும் 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோா்கள் உள்ளனா். இவா்கள் பொது முடக்கம் காரணமாக, உணவு கிடைக்காமல் திண்டாடினா். இதை கவனித்த எழும்பூா்

ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளா் எட்வா்ட், ஆய்வாளா் தாமஸ் ஏசுதாஸ் ஏற்பாட்டில், ரயில்வே போலீஸாரின் சொந்த செலவில் ஆதரவற்றோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மதியம் உணவு, குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எழும்பூா் ரயில் நிலையம் எதிரிலும், அருகில் உள்ள சாலை ஒட்டி இருக்கும் ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தினமும் 200 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. பொது முடக்கம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என்று ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT