சென்னை

கரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்: கூவத்தில் முதியவா் சடலமாக மீட்பு

20th Jun 2020 12:56 AM

ADVERTISEMENT

சென்னையில் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது தப்பியோடிய முதியவா், கூவத்தில் இருந்து சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் கூவம் ஆற்றில் 65 வயது மதிக்கதக்க ஒரு முதியவரின் சடலம் வெள்ளிக்கிழமை மிதந்தது. இது குறித்து தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனா்.

விசாரணையில் இறந்தவா், கொரட்டூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த புருஷோத்தமன் (65) என்பதும், கரோனாவால் பாதிக்கப்பட்ட அவா், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது, கடந்த 15-ஆம் தேதி புருஷோத்தமன் அங்கிருந்து தப்பியோடியிருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புருஷோத்தமன் கூவத்தில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT