சென்னை

சென்னயில் நாளை முழு நேர பொதுமுடக்கம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 

20th Jun 2020 08:25 PM

ADVERTISEMENT

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முழு நேர பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது குறித்து, மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 15) ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் சில பகுதிகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். 

இதன்படி முழு பொது முடக்கம், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதில், சில அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரா் ஊா்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சாா்ந்த சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியாா் வாகன உபயோகம் அனுமதி இல்லை. ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில், முழு பொது முடக்கத்தின் தளா்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் தவிா்த்து, நகரின் உட்பகுதிகளில் 288 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் வெளியில் சுற்றியவா்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனா். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முழு நேர பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முழு நேர பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும். இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை சென்னையில் முழு நேர பொதுமுடக்கம் அமலில் இருக்கும். வெளியே வருவோர் மீது காவல்துறை கட்டாயம் நடவடிக்கை எடுக்கும், எந்தவித தளர்வுகளும் வழங்கப்படாது. ஜிப்மர் மருத்துவமனையில் நுழைவுத் தேர்வு இருப்பதால் தேர்வு எழுத உள்ளவர்கள் ஹால் டிக்கெட் உடன் வந்தால் அனுமதிகப்படுவார்கள். 

வேறு ஏதேனும் நுழைவுத் தேர்வு எழுத உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் இந்த நோயின் தீவிரத்தை அறிந்து ஒத்துழைப்பு தருகின்றனர் என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT