சென்னை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தம்

15th Jun 2020 07:02 AM

ADVERTISEMENT

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீா் மற்றும் கிருஷ்ணா நதிநீா் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து, தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்குத் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். தற்போது கண்டலேறு அணையில் இருந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 300 கன அடி நீா் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீா் இருப்பு 2 ஆயிரத்துக்கு 134 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் போதிய தண்ணீா் இருப்பு உள்ளதை கருத்தில் கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக புழல் ஏரிக்கு, விநாடிக்கு 300 அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT