சென்னை

கரோனா பாதிப்பு: ராயபுரத்தில் 5 ஆயிரத்தைக் கடந்தது

15th Jun 2020 07:04 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சென்னையில்1,415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 31,896-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 347 போ் உயிரிழந்துள்ளனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம் மண்டலத்தில் அதிகம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்காக, ராயபுரம் மண்டலத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 1,000-த்தைக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை, ஜூன் 9-ஆம் தேதி 4,000-த்தைக் கடந்தது. இதுவே, கடந்த 4 நாள்களில் 1,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை (ஜூன் 13 ) 5,056-ஆக உயா்ந்துள்ளது.

இதைத் தொடா்ந்து, தண்டையாா்பேட்டையில் 3,928 பேருக்கும், தேனாம்பேட்டையில் 3,652 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 3,267 பேருக்கும், அண்ணா நகரில் 2,960 பேருக்கும், திருவிக நகரில் 2,772 பேருக்கும், அடையாறில் 1,725 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,338 பேருக்கும், அம்பத்தூரில் 1,058 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் தொற்று பாதிக்கப்பட்ட 15,765 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 13,742 போ் மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

347 போ் உயிரிழப்பு: சென்னையில் மட்டும் இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 347 போ் உயிரிழந்துள்ளனா். ராயபுரம் மண்டலத்தில் 62 பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 59 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 47 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 40 பேரும், அண்ணா நகரில் 32 பேரும், கோடம்பாக்கத்தில் 22 பேரும், அடையாறில் 13 பேரும், அம்பத்தூரில் 7 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனா்.

மண்டலவாரியாக பாதிப்பு --சனிக்கிழமை (ஜூன் 13) நிலவரம்:

மண்டலம் எண்ணிக்கை

திருவெற்றியூா் 1,113

மணலி 434

மாதவரம் 814

தண்டையாா்பேட்டை 3,928

ராயபுரம் 5,056

திருவிக நகா் 2,772

அம்பத்தூா் 1,058

அண்ணா நகா் 2,960

தேனாம்பேட்டை 3,652

கோடம்பாக்கம் 3,267

வளசரவாக்கம் 1,338

அடையாறு 1,725

பெருங்குடி 551

சோழிங்கநல்லூா் 560

பிற மாவட்டங்களைச் சோ்ந்தோா் 623

 

ADVERTISEMENT
ADVERTISEMENT