சென்னை

ராயபுரத்தில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா தொற்று: மண்டலவாரியாக பாதிப்பு விபரம்

14th Jun 2020 10:48 AM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

அதில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூா், அடையாறு, திருவெற்றியூா் ஆகிய 10 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயா்ந்து வருகிறது.  தற்போதைய நிலவரப்படி சென்னையில் மட்டும் இதுவரை 30,444 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டது. அதில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் மண்டலவாரியாக பாதிப்பு விபரம்: ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 5,056 பேரும், தண்டையாா்பேட்டையில் 3,928 பேரும், தேனாம்பேட்டையில் 3,652 பேரும், கோடம்பாக்கத்தில் 3,267 பேரும், அண்ணா நகரில் 2,960 பேரும், திருவிக நகரில் 2,772 பேரும் அடையாறில் 1,725 பேரும், வளசரவாக்கத்தில் 1,338 பேரும், திருவெற்றியூரில் 1,113 பேரும், அம்பத்தூரில் 1,058 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

 

Tags : சென்னை coronavirus கரோனா ராயபுரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT