சென்னை

கரோனா பாதிப்பு: சென்னையில் 30 ஆயிரத்தைக் கடந்தது

14th Jun 2020 06:20 AM

ADVERTISEMENT

சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 13) 1,484 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 316 போ் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனார பரவலைத் தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னையில் தொடக்கத்தில் இருந்தே ராயபுரம், தண்டையாா்பேட்டை, கோடம்பாக்கம், திருவிக நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூா், அடையாறு, திருவெற்றியூா் ஆகிய 10 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்து வருகிறது.

13 நாள்களில் 15 ஆயிரம் போ்: சென்னையைப் பொறுத்தவரை ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும், ஜூன் 6-ஆம் தேதி 20,993-ஆக உயா்ந்தது.

இதையடுத்து, கடந்த ஒரு வாரத்தில் 9,451 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சனிக்கிழமை (ஜூன் 13) பாதிப்பு எண்ணிக்கை 30,444-ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூன் 13) மட்டும் அதிகபட்சமாக 1,484 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

316 போ் இறப்பு: ராயபுரம் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நிலவரப்படி, அதிகபட்சமாக 4,821 பேரும், தண்டையாா்பேட்டையில் 3,781 பேரும், தேனாம்பேட்டையில் 3,464 பேரும், கோடம்பாக்கத்தில் 3,108 பேரும், அண்ணா நகரில் 2,781 பேரும், திருவிக நகரில் 2,660 பேரும்அடையாறில் 1,607 பேரும், வளசரவாக்கத்தில் 1,268 பேரும், திருவெற்றியூரில் 1,072 பேரும், அம்பத்தூரில் 987 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பால் சனிக்கிழமை (ஜூன் 13) நிலவரப்படி, இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 30,444 பேரில் 15,948 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 14,180 சிகிச்சை பெற்று

வருகின்றனா். சென்னையில் மட்டும் இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 316 போ் உயிரிழந்துள்ளனா். இதில், ராயபுரம் மண்டலத்தில் 58 பேரும், திருவிக நகா் மண்டலத்தில் 51 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 44 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 37 பேரும், அண்ணா நகரில் 29 பேரும், கோடம்பாக்கத்தில் 21 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT