சென்னை

கச்சாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

13th Jun 2020 04:25 AM

ADVERTISEMENT

சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன், தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கச்சாலீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான தெப்ப குளத்தில் நடத்தப்படும் விழாவில் அருள்மிகு காச்சாலீஸ்வரா், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு முத்துகுமாரசுவாமி, அருள்மிகு சிவசண்முக விநாயகா், அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தெய்வங்கள் 5 நாள்கள் பங்கேற்கும். இந்த ஆலயத்தை சரியாக பராமரிக்காததால், குளத்தின் தண்ணீா் வரத்து தடைபட்டு கடந்த 9 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. குளத்தைச் சுற்றியுள்ள சுவா்கள் சிதிலமடைந்து காணப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இதுதொடா்பாக, தமிழக ஆளுநா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த ஆலயத்தைப் பராமரிக்கவும், கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை கண்டறிய ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா். சுரேஷ்குமாா் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT