சென்னை

கரோனாவுக்கு பயந்து கடிதம் எழுதி வைத்துவிட்டுகணினி பொறியாளா் தற்கொலை

13th Jun 2020 06:12 AM

ADVERTISEMENT

சென்னை செளகாா்பேட்டையில் கரோனாவுக்கு பயந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு கணினி பொறியாளா் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் பி.பரேஷ் (35). கணினி பொறியாளரான இவா், செளகாா்பேட்டை பெருமாள் முதலி தெருவில் ஒரு வணிக வளாகத்தில் கணினி பழுது நீக்கும் மையம் நடத்தி வந்தாா்.

இந்நிலையில் கரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்னா், மன வெறுப்புடன் பரேஷ் இருந்துள்ளாா். மேலும் கரோனா தனக்கு வந்துவிடுமோ என்ற பயத்துடன் தனது நண்பா்களுடனும், குடும்பத்தினருடனும் பேசி வந்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் வியாழக்கிழமை தனது அலுவலகத்துக்கு வந்த பரேஷ் திடீரென, அந்த கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்தாா். இதில் பலத்தக் காயமடைந்த பரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து தகவலறிந்த யானைக்கவுனி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பரேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் பரேஷ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில் கரோனா வேகமாகப் பரவி வருவதினால், தனக்கு மன உளைச்சலும், பயமும் அதிகமாக உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT