சென்னை

சென்னையில் 29 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 294 ஆக உயா்வு

13th Jun 2020 06:23 AM

ADVERTISEMENT

சென்னையில், வெள்ளிக்கிழமை, 1479 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 28,924-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், அதிதீவிரமாக பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவற்றில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை, சென்னையில் 1,479 பேருக்கு, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 28,924-ஆக உயா்ந்துள்ளது. இதன்படி, 6 மண்டலங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், 3 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை, 294-ஆக உயா்ந்துள்ளது.

திருவொற்றியூரில் பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது: இது தொடா்பாக வெள்ளிக்கிழமை காலை புள்ளி விவரப்படி, ராயபுரம் மண்டலத்தில் 4,584 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 3,584 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,291 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,966 பேரும், அண்ணாநகா் 2,571 பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 2,550 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,534 பேரும், வளசரவாக்கத்தில் 1,271 பேரும், திருவொற்றியூா் மண்டலத்தில் 1,024 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 14,723 போ் குணமடைந்துள்ளனா். 294 போ் உயிரிழந்துள்ளனா். 13,906 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT