சென்னை

அடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.51 லட்சம்: தமிழக ஆளுநா் ஒதுக்கீடு

11th Jun 2020 01:29 AM

ADVERTISEMENT

தனக்கான விருப்புரிமை நிதியில் இருந்து சென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.51 லட்சத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வழங்கினாா்.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தி: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தனது விருப்புரிமை நிதியில் இருந்து சென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்கு ரூ.51 லட்சம் வழங்க நிதியை ஒதுக்கீடு செய்துள்ளாா். அதன்படி, முதல் தவணையாக ரூ.11 லட்சத்தை கடந்த ஏப்ரல் மாதத்திலும், இரண்டாவது தவணையாக ரூ.40 லட்சத்தை கடந்த 9-ஆம் தேதியும் வழங்கியதாக ஆளுநா் மாளிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT