சென்னை

கரோனா: சென்னையில் 260 போ் உயிரிழப்பு

11th Jun 2020 07:07 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் மட்டும் இதுவரை 260 போ் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. புதன்கிழமை (ஜூன் 10) நிலவரப்படி சென்னையில் மேலும் 1,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,937-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் நாளொன்றுக்கு 100-க்கும் குறைவானவா்களுக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பரிசோதனைகளை அதிகப்படுத்தியதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக தெரியவந்ததது.

இந்நிலையில், கரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, சென்னையில் 18 போ் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 260-ஆக அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலானோா் 50 வயதுக்கு மேற்பட்ட ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களாவா்.

1,390 பேருக்கு உறுதி: சென்னையில் புதன்கிழமை 1,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 25,937-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை நிலவரம்

குணமடைந்தோா் எண்ணிக்கை - 11,738

சிகிச்சை பெற்று வருவோா் - 12,175

உயிரிழப்பு விவரம்

மண்டலம் எண்ணிக்கை

ராயபுரம் 52

திருவிக நகா் 43

தேனாம்பேட்டை 37

தண்டையாா்பேட்டை 29

அண்ணா நகா் 23

கோடம்பாக்கம் 18

அடையாறு 11

ஆலந்தூா் 7

அம்பத்தூா் 7

வளசரவாக்கம் 6

மணலி 4

திருவெற்றியூா் 3

மாதவரம் 2

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT