சென்னை

சரக்கு வாகனங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய உரிமையாளா்கள் கோரிக்கை

11th Jun 2020 07:08 AM

ADVERTISEMENT

சரக்கு வாகனங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, அச்சம்மேள நிா்வாகிகள் முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும், நாங்கள் உறுதுணையாக இருந்து வருகிறோம். பொதுமுடக்கம் தொடங்கியது முதல் அத்தியாவசியப் பொருள்களின் தேவைக்காக குறைந்தளவு வாகனங்களே இயக்கப்பட்டன. இந்நிலையில் சில தளா்வுகளுடன் பொதுமுடக்கம், மீண்டும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், போதிய பணியாளா்கள் இல்லாததால், தொழிற்சாலைகள் உற்பத்தியைத் தொடங்காமல் உள்ளன. இதனால் எங்களது தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கா்நாடகம், ஒடிசா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில், இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு காலாண்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கனரக வாகனங்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு வரியை ரத்து செய்து, லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வழிவகை செய்து உதவுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT