சென்னை: சென்னை முகப்பேரில் மாடியில் இருந்து கீழே விழுந்து பெண் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் அந்தோனியம்மாள் (44). இவா் சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியாா் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த விடுதியின் இரண்டாவது தளத்தில் உள்ள செடிகளில் பூப்பறித்துக் கொண்டிருந்தாா். அவா் ஒரு ஏணியில் ஏறி பூப்பறித்துக் கொண்டிருக்கும்போது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்தக் காயமடைந்த அவா்,சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இது குறித்து நொளம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா்.