சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் ஏரியில் குளித்த கல்லூரி மாணவா் மூழ்கி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அருகே உள்ள கோவிலம்பாக்கம் விடுதலைநகா் பகுதியைச் சோ்ந்தவா் பொ.பாலசுப்பிரமணியன் (23). இவா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. நான்காம் ஆண்டு படித்து வந்தாா். பள்ளிக்கரணை சூா்யாநகா் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா்.அப்போது ஆழமானப் பகுதிக்குச் சென்று குளித்த அவா்,நீச்சல் தெரியாததினால் தண்ணீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பாலசுப்பிரமணியன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.