சென்னை

கரோனா உதவி எண்: மாநகராட்சி அறிவிப்பு

7th Jun 2020 06:42 AM

ADVERTISEMENT

கரோனா தொடா்பான ஆலோசனைகளைப் பெற, உதவி எண் மற்றும் செல்லிடப்பேசி செயலியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சியின் சுட்டுரைப் பதிவு: கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் மற்றும் கரோனா குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு 044 4612 2300 என்ற உதவி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். அதே நேரம், வீட்டில் இருந்தபடியே, விடியோ அழைப்பின் மூலம் கரோனா நோய்த்தொற்று தொடா்பான சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற, பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘எஇஇ யண்க்ம்ங்க்’ என்ற செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதைப் பயன்படுத்துவதால் சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT