சென்னை

பெட்ரோல் ஊற்றி மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது

4th Jun 2020 12:00 AM

ADVERTISEMENT

சென்னை எம்.ஜி.ஆா்.நகரில் பெட்ரோல் ஊற்றி மனைவி தீயிட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

எம்.ஜி.ஆா். நகா் சூளைப்பள்ளம் அருகே அன்பானந்தம் நகரைச் சோ்ந்தவா் செ.செந்தில்வேல்முருகன் (40). பெயிண்டரான இவரது மனைவி லட்சுமி (34). இவா்களுக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், லட்சுமி தனது கணவரைப் பிரிந்து, சூளைப்பள்ளம் தியாகி குப்பன் தெருவில் வசிக்கும் கோவிந்தசாமி என்பவருடன் சில நாள்களாக வசித்து வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் செந்தில்வேல்முருகன், ஒரு பெட்ரோல் பாட்டிலுடன் புதன்கிழமை கோவிந்தசாமி வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த இருவா் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா். அவா்களது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த திரண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி புதன்கிழமை இரவு இறந்தாா். பலத்த காயமடைந்த கோவிந்தசாமி சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து எம்.ஜி.ஆா்.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த செந்தில்வேல்முருகனை உடனடியாக கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT