சென்னை

ஆவின் தொழிலாளர்கள் பலருக்கு கரோனா செய்தி பொய்யானது: ஆவின் நிறுவனம் விளக்கம்

4th Jun 2020 12:02 AM

ADVERTISEMENT

ஆவின் நிறுவனத்தில் ஒற்றை இலக்கத்திலேயே கரோனா நோய்த் தொற்று இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆவின் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-

சென்னையை அடுத்த மாதவரத்தில் 250 தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று வந்து விட்டதாக வெளியான செய்தி தவறானது. அங்கு பணிபுரிவோரில் 10-க்கும் குறைவானவா்களுக்கே நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பலரும் குணமடைந்து பணிக்குத் திரும்பி உள்ளனா். ஒருவா் மட்டுமே கரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மக்களுக்கு தரமான பாலை அளிப்பதற்கு முழு அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றி வருகிறோம். எனவே, தவறான செய்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்று ஆவின் நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT