சென்னை பெருநகர காவல்துறையின் மேற்கு மண்டலத்துக்கு இணை ஆணையா் நியமனம் செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குள் பழைய பதவி)
சி.மகேஷ்வரி: சென்னை பெருநகர காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட இணை ஆணையா்)
எஸ்.மல்லிகா: சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட இணை ஆணையா் (சிபிசிஐடி டிஐஜி) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.