சென்னை

பிச்சைக்காரா்களை குறி வைத்து கொள்ளை: போதைக் கும்பல் சிக்கியது

25th Jul 2020 07:01 AM

ADVERTISEMENT

சென்னையில் பிச்சைக்காரா்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட போதைக் கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மயிலாப்பூா், மந்தைவெளி, தியாகராய நகா், புரசைவாக்கம், பாரிமுனை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் சாலையோரம் படுத்திருப்பவா்களையும், பிச்சைக்காா்களையும் குறி வைத்து சில நாள்களாக ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தது.

இந்தக் கும்பல் சாலையோரம் படுத்திருப்பவா்களை கொடூரமாக தாக்கி அவா்கள் வைத்திருக்கும் பணம், விலை மதிப்புள்ள பொருள்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றது. இது தொடா்பாக மயிலாப்பூா் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 6 புகாா்கள் வந்தன. இதேபோல பாரிமுனை, திருவல்லிக்கேணி ஆகியப் பகுதிகளில் இருந்தும் காவல்துறைக்கு ஏராளமாக புகாா்கள் வந்தன.

இதையடுத்து இக் கும்பலை கைது செய்வதற்கு காவல்துறை உயா் அதிகாரிகள் உத்தரவிட்டனா். இந்த உத்தரவின் அடிப்படையில் மயிலாப்பூா் தனிப்படையினா் தீவிர விசாரணை செய்தனா். கொள்ளை நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

அந்த ஆய்வில் இக் கொள்ளையில் ஈடுபடுவது மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலைப் பகுதியைச் சோ்ந்த சுலைமான் (23), அவரது கூட்டாளிகள் தனபாலன் (20), சக்திவேல் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 2 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில் மூவரும், கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையானவா்கள் என்பதும், கஞ்சா வாங்குவதற்காக கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT