சென்னை

கொத்தவால்சாவடியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

13th Jul 2020 04:46 AM

ADVERTISEMENT

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கொத்தவால்சாவடியில் திங்கள்கிழமை (ஜூலை 13) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கொத்தவால்சாவடியில் உள்ள மொத்த மளிகைப் பொருள்கள் விற்பனைக் கடைகளில் வியாபாரிகளும், பொதுமக்களும் பொருள்கள் வாங்க கூட்டமாக வருவதால் அங்கு கரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் என்.கண்ணன் கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா். நந்தகுமாா் ஐ.ஏ.எஸ்., வடக்கு மண்டல இணை ஆணையா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் கொத்தவால்சாவடி பகுதியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக அங்கு திங்கள்கிழமை (ஜூலை 13) போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கொத்தவால்சாவடிக்குள் செல்வதற்கு வாகன ஓட்டிகள் பிரகாசம் சாலை - லோன் ஸ்கொயா், அண்ணா பிள்ளை தெரு வழியாக செல்ல வேண்டும். இல்லையெனில் பிரகாசம் சாலை, பி.வி.அய்யா் தெரு வழியாக செல்லலாம்.

பிரகாசம் தெரு, அண்ணா பிள்ளைத் தெரு, ஆதியப்பா தெரு ஆகிய தெருக்கள் தங்கச்சாலை வரை வாகனங்கள் உள்ளே செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.

தங்கச் சாலை முதல் தாதா முத்தியப்பன் தெரு, பிரகாசம் சாலை வரை வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படும். தங்கச்சாலை அரசு மைய அச்சகம் முதல் மகாசக்தி ஹோட்டல் வரை வழக்கம்போல இரு வழிப்பாதையாக செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.

இக் கூட்டத்தில் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா்கள் ஜெயகெளரி, லட்சுமி ஆகியோா் பங்கேற்றனா். வணிகா் சங்க பிரதிநிதிகள், சரக்கு வாகனங்கள் இயக்குபவா்களும் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கருத்துகளை பதிவு செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT