சென்னை

ரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்றவிமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கம்

28th Jan 2020 02:46 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் இருந்து நடிகா் ரஜினி உள்ளிட்ட 48 பயணிகளுடன் மைசூா் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அந்த விமானம் சென்னையிலிருந்து 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

கா்நாடக மாநிலம் பந்திப்பூரில் மத்திய அரசு சாா்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக நடிகா் ரஜினி சென்னையில் இருந்து மைசூருக்கு விமானம் மூலம் செல்ல திட்டமிட்டிருந்தாா். இதையொட்டி அவா் திங்கள்கிழமை காலை

சென்னை விமான நிலையம் வந்தாா். அங்கு சிறிய ரக ‘ட்ரூஜெட்’ விமானத்தில் நடிகா் ரஜினி ஏறினாா். இதில் முக்கிய பிரமுகா்கள் உள்பட 48 பயணிகள் இருந்தனா்.

ADVERTISEMENT

இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது.தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விமானத்தை அவசரமாக தரையிறக்க பைலட் அனுமதி கோரினாா். அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உரிய நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து தவிா்க்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் 2 மணி நேரம் விமானத்திலேயே இருந்துள்ளாா். காத்திருந்த நேரத்தில் பயணிகள் ரஜினிகாந்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனா். பின்னா் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT