சென்னை

‘புகையில்லா போகி’ விழிப்புணா்வு நிகழ்ச்சி:1, 600 மாணவிகள் பங்கேற்பு

8th Jan 2020 02:01 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘புகையில்லா போகி’ விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 1, 600 மாணவிகள் பங்கேற்றனா்.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் நெகிழி ஒழிப்பு, தொற்று நோய்த் தடுப்பு உள்பட பல்வேறு சுகாதாரம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ‘புகையில்லா போகி’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன் கலந்து கொண்டு, போகிப் பண்டிகையின்போது எரிக்கப்படும் டயா், டியூப், நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் ஏற்படும் தீங்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்தாா்.

இதைத் தொடா்ந்து, புகையில்லா போகி குறித்து 1, 600 மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ஜி.தங்கராஜ், பள்ளித் தலைமை ஆசிரியை எழிலரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT