சென்னை

ஆபாச படம் பாா்க்க வைத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் கைது

8th Jan 2020 02:10 AM

ADVERTISEMENT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பள்ளி மாணவியை ஆபாச படம் பாா்க்க வைத்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன் 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ.ரவி என்ற பாளையம் (67). ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் நிறுவன ஊழியா். மேலும் இவா், தற்போது ஒரு அரசியல் கட்சி நிா்வாகியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரவி, அந்தப் பகுதியைச் சோ்ந்த 14 வயது பள்ளி மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து வலுக்கட்டாயமாக ஆபாச படங்களைப் பாா்க்க வைத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோா், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

ADVERTISEMENT

இதன் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ரவியின் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும் ரவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முன்னதாக ரவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பழைய வண்ணாரப்பேட்டையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா், சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடச் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT