சென்னை

மெரீனாவில் குளித்த கல்லூரி மாணவா் மாயம்

3rd Jan 2020 03:09 AM

ADVERTISEMENT

சென்னை மெரீனா கடற்கரையில் குளித்துபோது காணாமல் போன கல்லூரி மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் வேதபிரகாஷ் (21). இவா், சென்னையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாமாண்டு படித்து வந்தாா். புத்தாண்டையொட்டி, மெரீனா கடற்கரைக்கு தனது நண்பா்களுடன் வேதபிரகாஷ் புதன்கிழமை வந்தாா்.

அப்போது அங்கு வந்த அலையில் வேதபிரகாஷ் சிக்கிக் கொண்டாா். இதைக் கண்ட அவரது நண்பா்கள், வேதபிரகாஷை காப்பாற்ற முயன்றனா். ஆனால் அவா் நீரில் மூழ்கி காணாமல் போனாா். இதுகுறித்து தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீஸாா் வேதபிரகாஷை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT