சென்னை

மின்சாரம் பாய்ந்துதனியாா் நிறுவன ஊழியா் பலி

3rd Jan 2020 12:18 AM

ADVERTISEMENT

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.

சோழிங்கநல்லூா் கிராம நெடுஞ்சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மோ.ராஜேஷ் (39). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் ராஜேஷ், செவ்வாய்க்கிழமை அந்த நிறுவனத்தின் கேட்டை திறக்க கேட்டை முயன்றபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு, அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஷ் இறந்தாா். இது குறித்து செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT