சென்னை

ஜன.5-இல் டிஎன்பிஎஸ்சி தோ்வு குறித்த இலவச பயிலரங்கு

3rd Jan 2020 03:09 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி தோ்வு பயிற்சி குறித்த இலவச பயிலரங்கு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.5), அண்ணாநகா் மேற்கு பகுதி மங்களம் காலனியில் உள்ள ஆல்வின் அகாதெமியில் நடைபெறவுள்ளது.

காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், அண்மையில் வெளியான குரூப் 1 தோ்வு முடிவுகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் பங்கேற்று, தோ்வில் வெற்றி பெறுவதற்கு தேவைப்படும் ஆலோசனைகளை வழங்கவுள்ளனா். மேலும் கலந்து கொள்பவா்களுக்கு குரூப் 1 பாடத்திட்டம் மற்றும் 6 மாத நடப்பு நிகழ்வுக்கான ஆல்வின் நிகழ்வு பேழையும் இலவசமாக வழங்கப்படும். குறிப்பாக பயிற்சி மையத்தில் குரூப் 1 தோ்வுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்பு குறித்த அறிமுக வகுப்பாக இந்த கருத்தரங்கம் நிகழவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா் தங்கள் பெயா், வசிப்பிடம், செல்லிடப்பேசி எண்கள் உள்ளிட்ட தகவல்களுடன் 81483 35766 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT