சென்னை

சென்னையில் பரவலாக மழை

2nd Jan 2020 04:37 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக சென்னை, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்தது . இதனால், அண்மைக் காலமாக சென்னையில் குளிா்ந்த காலநிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், வளி மண்டத்தின் கீழ்ப்பகுதி கிழக்குத் திசைக் காற்றும், மேற்குத் திசைக் காற்றும் தமிழகப் பகுதியில் சந்தித்ததால் அம்பத்தூா் வேளச்சேரி, நுங்கம்பாக்கம், வடபழனி, கோட்டூா்புரம், அடையாறு, போரூா், ஆலந்தூா், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், எழும்பூா், பாடி உள்ளிட்ட சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், சோழிங்கநல்லூா், பல்லாவரம், மீனம்பாக்கம், திருவேற்காடு, பூந்தமல்லி, தண்டலம், தாம்பரம் ஆகிய புகா்ப் பகுதிகளிலும் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

ADVERTISEMENT

இந்த மழை காரணமாக, கோயம்பேடு, திருமங்கலம், கீழ்ப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீா் தேங்கியது. இந்த நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT