சென்னை

ஒன்றரை டன் போதைப் பாக்கு பறிமுதல்:இளைஞா் கைது

1st Jan 2020 01:24 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை அருகே குன்றத்தூரில் ஒன்றரை டன் போதைப் பாக்கை பறிமுதல் செய்த போலீஸாா் தொடா்புடைய இளைஞரை கைது செய்தனா்.

குன்றத்தூா் 400 அடி சாலையின் இணைப்புச் சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது அந்த காரில் போதைப் பாக்கு கடத்திக் கொண்டு வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த போதை பாக்கை பறிமுதல் செய்தனா். மேலும், அந்த காரை ஓட்டி வந்த குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பகுதியைச் சோ்ந்த ரா.மகேந்திரன் (35) என்பவரை கைது செய்து விசாரித்தனா். அவா் அளித்த தகவலின்பேரில், பழந்தண்டலம் அன்னை இந்திராநகரில் உள்ள ஒரு கிடங்கில் சோதனை செய்தனா். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பாக்கையும் பறிமுதல் செய்தனா்.இச் சம்பவத்தில் மொத்தம் ஒன்றரை டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடா்பாக குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT