சென்னை

விமான நிலையத்தில் ரூ.54.6 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: ஒருவா் கைது

26th Feb 2020 01:20 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.54.6 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை விமான நிலையத்தில் நிகழும் கடத்தல் குறித்து விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கோலாலம்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை வந்த கலாந்தா் மெய்தீன் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவா் மலக்குடலில் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 334 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் சிங்கப்பூரில் இருந்து திங்கள்கிழமை வந்த சல்மான் பாரிஸ் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவரது உடைமையிலிருந்து ரூ.18.17 லட்சம் மதிப்பிலான 410 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து கொழும்பிலிருந்து வந்த பாத்திமா பாஸ்மியா என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவா் மலக்குடலில் மறைத்து வைத்திருந்த ரூ.21.5 லட்சம் மதிப்பிலான 485 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இவா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.54.6 லட்சம் மதிப்பிலான 1.23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்த அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT