சென்னை

மெட்ரோ ரயில் நிலையங்களில் மருத்துவ முகாம்: 1, 272 பேருக்கு பரிசோதனை

26th Feb 2020 04:58 AM

ADVERTISEMENT


சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்ற 1, 272 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மெட்ரோ ரயில் நிறுவனம், அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 
இந்த மருத்துவ முகாம் சென்ட்ரல், ஏஜி, டி.எம்.எஸ்., சைதாப்பேட்டை, ஆலந்தூர், எல்.ஐ.சி., திருமங்கலம், வடபழனி, வண்ணாரப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் டவர், ஷெனாய் நகர் ஆகிய 12 மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மெட்ரோ ரயில் பயணிகள், பொதுமக்கள், மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் என காலையில் 548 பேரும், மாலையில் 724 பேர் உள்பட 1, 272 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவ முகாமில் பிஎம்ஐ(உயரம், எடை), ரத்த அழுத்தம், சீரற்ற ரத்த சர்க்கரை ஆகிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

3-ஆவது நாள் மருத்துவ முகாம்: மூன்றாவது நாள் மருத்துவ முகாம் சென்ட்ரல், ஏஜி, டி.எம்.எஸ்., சைதாப்பேட்டை, ஆலந்தூர், எல்.ஐ.சி., திருமங்கலம், வடபழனி, வண்ணாரப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் கோபுரம், ஷெனாய் நகர் ஆகிய 12 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதன்கிழமை காலை 8 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும்
நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT