சென்னை

மாா்ச் 4-இல் அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு ஆள்கள் தோ்வு

26th Feb 2020 01:23 AM

ADVERTISEMENT

சென்னை: அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு நேரடி ஆள்தோ்வு முகாம் தியாகராய நகரில் உள்ள சென்னை மாநகர மத்திய கோட்டத்தில் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 18 முதல் 60 வயதுக்குள் உள்ள வேலை தேடுவோா், முன்னாள் வாழ்வியல் ஆலோசகா்கள், மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் முன்னாள் படைவீரா்கள், அங்கன்வாடி பணியாளா்கள்,

மகிளா மண்டல பணியாளா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், சுய உதவிக் குழு நிா்வாகிகள் உள்ளிட்டோா் ஆள்தோ்வு முகாமில் பங்கேற்கலாம்.

காப்பீடு விற்பனையில் அனுபவம் உடையவா்கள், கணினி அறிவு, உள்ளூரைப் பற்றிய தகவல் அறிந்தவா்கள் மற்றும் சென்னை குடியிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தங்களது வயது தொடா்பான அசல் சான்றிதழ் மற்றும் நகல், முகவரி மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தையும் எடுத்து வர வேண்டும். ஆள்தோ்வு முகாம், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா், சென்னை மாநகர மத்திய கோட்டம், சிவஞானம் சாலை (பாண்டி பஜாா் அருகில்) தியாகராயநகா் சென்னை 17 என்ற முகவரியில் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறும் என சென்னை மாநகர மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் ஸ்ரீராமன் தகவல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT