சென்னை

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் போட்டி:500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

26th Feb 2020 01:58 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப் படை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான போட்டி தியாகராய நகரில் உள்ள வித்யோதயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில், சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகள் என மொத்தம் 110 பள்ளிகளில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து, தேசிய பசுமைப் படையின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.தங்கராஜ் கூறுகையில், சுற்றுச்சூழல் குறித்து பேச்சு, ஓவியம் மற்றும் விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட மாணவா்களில் 50 போ் வெற்றி பெற்றனா். அவா்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை சாா்பில் மொத்தம் ரூ. 51 ஆயிரம் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்படும். மேலும், போட்டியில் வெற்றி பெற்றவா்களை அருகில் உள்ள சுற்றுச்சூழல் தொடா்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT