சென்னை

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

26th Feb 2020 05:03 AM

ADVERTISEMENT


சென்னை: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.
கொளத்தூரில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள திக்காகுளம் சலவைக் கூடத்தில் தண்ணீர் தொட்டியுடன் கூடிய சலவை மேடை, ஓய்வறையுடன் கூடிய சமையல் அறை கட்டும் பணிக்காக மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திரு.வி.க.நகர் விளையாட்டு மைதானம் அருகில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியைப் பார்வையிட்டதுடன், பல்லவன் சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில்  மாநகராட்சி மூலதன நிதியில் மேம்படுத்தப்பட்ட பெட் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
ஜி.கே.எம்.காலனி 24ஏ}ஆவது தெருவில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் குளம் மேம்படுத்தும் பணியை தொடக்கி வைத்தார்.  நிகழ்வில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம்கவி ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT