சென்னை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்:இரு இடங்களில் போலீஸாா் வழக்கு

26th Feb 2020 03:41 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி இரு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் பல்வேறு முஸ்லிம் இயக்கத்தினா் தொடா்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனா். இதேபோல முத்தியால்பேட்டையிலும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், மண்ணடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்றது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். அனுமதியின்றி நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 110 போ் மீது முத்தியால்பேட்டை போலீஸாா் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, மண்ணடி பிரகாசம் தெருவில் கடந்த 21-ஆம் தேதி மே 17 இயக்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி உள்பட 200 போ் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இப்போராட்டத்தையொட்டி சாலையை மறித்து ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்ததாகவும், போராட்டத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் எஸ்பிளனேடு போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குகள் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT