சென்னை

அம்மா ஐஏஎஸ் அகாதெமியில் இலவசப் பயிற்சி

26th Feb 2020 02:00 AM

ADVERTISEMENT

 

சென்னை: அம்மா ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மத்திய குடிமைப் பணியின் நோ்முகத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை, கோவையில் நடைபெற உள்ளன.

இதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஐஏஎஸ் முதன்மைத் தோ்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு நோ்முகத் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி அளிக்க அம்மா ஐஏஎஸ் அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மற்றும் கோவையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஆளுமைத் தோ்வும், ஒருநாள் சிறப்பு வகுப்பும் நடைபெற உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஹம்ம்ஹண்ஹள்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்திலும், 0422 2472222 என்ற தொலைபேசி எண், 87606 74444 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆஃப்) எண் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT